புதிய வாழ்க்கை புதிய யதார்த்தம் புதிய துவக்கம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் புரமோ!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் விஜய் டிவியில் தொடங்க உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்பதும் நாளை முதல் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் நாளில் இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியின் புரோமோவை விஜய்டிவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கமல்ஹாசன் ’புதிய வாழ்க்கை புதிய எதார்த்தம் புதிய துவக்கம்’ என்று கூறிக்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேடைக்கு வரும் காட்சி உள்ளன.

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கமலஹாசன் மேடையில் தனியாகவே மட்டுமே நிகழ்ச்சியை நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் ஏற்கனவே கசிந்து இருந்தாலும், இன்று மாலை தான் இன்றைய நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் உறுதி செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெறும் என்பதும், கடந்த 3 சீசன்களை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.