'எங்க ஏரியா உள்ள வராதே'.. முதல் நாளே ஆட்டம் போடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியது என்பதும் நேற்றைய அறிமுக நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களின் அறிமுகம் பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.
கடந்த ஐந்து சீசன்களையும் மிக சிறப்பாக தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று 6வது சீசனையும் தொகுத்து வழங்கினார் என்பதும், வழக்கம் போல் அவர் இந்த நிகழ்ச்சியை பிரமாதமாக தனக்கே உரிய பாணியில் ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் அறிமுகமும் அசத்தலாக இருந்தது என்பது குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் காலை போட்டியாளர்களை விழிப்பதற்காக பாடல் ஒன்று ஒலிக்கப்படும் நிலையில் இன்றைய முதல் நாளில் ’எங்க ஏரியா உள்ள வராதே’ என்ற பாடலை பிக்பாஸ் ஒலிக்க வைத்த நிலையில் அனைத்து போட்டியாளர்களும் வெளியே வந்து ஆட்டம் போடும் காட்சிகள் புரமோவில் உள்ளன.
முதல் நாளில் ஒருவருக்கு ஒருவர் கைகோர்த்து கொண்டு ஒற்றுமையாக ஆட்டம் போடும் இந்த போட்டியாளர்கள் அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#BiggBossTamil6 இல்லத்தின் #Day01 #WakeUpSong #NowStreaming on #disneyplushotstar.. @ikamalhaasan pic.twitter.com/qS9AJsmgEz
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) October 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments