close
Choose your channels

பிக்பாஸ் ஓட்டுகள்.. 2ஆம் இடத்திற்கு முன்னேறியவர் இவரா? .. கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்..!

Thursday, January 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது டைட்டில் வின்னருக்கான ஓட்டுகள் பதிவாகி கொண்டிருக்கின்றன. அனைவரும் எதிர்பார்த்தபடியே அர்ச்சனாவுக்கு தான் அதிக அளவு ஓட்டுகள் கிடைத்திருக்கிறது என்றாலும் இரண்டாம் இடத்தில் இருக்கும் போட்டியாளர் பெயர் தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த சீசனில் மிகவும் சுமாராக விளையாடியவர் என்று விமர்சனம் செய்யப்பட்டவர் மணி. பெரும்பாலும் அவர் ரவீனாவுடன் இணைந்து ஆடியதாகவும் இருவரும் இணைந்து ஆடியதால்தான் மணி ஓரளவு தாக்குப்பிடித்தார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அர்ச்சனாவை அடுத்து அதிக வாக்குகள் பெற்றிருப்பது மணி என்று தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி மணிக்கு அதிகமாக வாக்குகள் பதிவாகி கொண்டிருப்பதாகவும் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்றும் சேனல் வட்டாரங்கள் கூறுவதால் மணி டைட்டில் பட்டத்தை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

திடீரென மணிக்கு அதிகமாக வாக்குகள் பதிவு ஆவது ஏன் என்று குறித்து விசாரித்த போது சமீபத்தில் எலிமினேஷனான ரவீனா தான் மணிக்காக தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவரது நட்பு வட்டாரங்களில் மணிக்கு அவர் வாக்குகள் சேகரிப்பதால் தான் அதிகமாக வாக்குகள் அவருக்கு பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ரவீனா தரப்பு இதனை மறுத்து உள்ளது.

இன்னும் இரண்டு நாளில் ஏதேனும் திருப்பம் ஏற்படுமா? டைட்டில் வின்னர் யாரும் எதிர்பாராத ஒருவருக்கு செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment