பிக்பாஸ் ஓட்டுகள்.. 2ஆம் இடத்திற்கு முன்னேறியவர் இவரா? .. கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்..!

  • IndiaGlitz, [Thursday,January 11 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது டைட்டில் வின்னருக்கான ஓட்டுகள் பதிவாகி கொண்டிருக்கின்றன. அனைவரும் எதிர்பார்த்தபடியே அர்ச்சனாவுக்கு தான் அதிக அளவு ஓட்டுகள் கிடைத்திருக்கிறது என்றாலும் இரண்டாம் இடத்தில் இருக்கும் போட்டியாளர் பெயர் தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இந்த சீசனில் மிகவும் சுமாராக விளையாடியவர் என்று விமர்சனம் செய்யப்பட்டவர் மணி. பெரும்பாலும் அவர் ரவீனாவுடன் இணைந்து ஆடியதாகவும் இருவரும் இணைந்து ஆடியதால்தான் மணி ஓரளவு தாக்குப்பிடித்தார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அர்ச்சனாவை அடுத்து அதிக வாக்குகள் பெற்றிருப்பது மணி என்று தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி மணிக்கு அதிகமாக வாக்குகள் பதிவாகி கொண்டிருப்பதாகவும் கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்றும் சேனல் வட்டாரங்கள் கூறுவதால் மணி டைட்டில் பட்டத்தை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

திடீரென மணிக்கு அதிகமாக வாக்குகள் பதிவு ஆவது ஏன் என்று குறித்து விசாரித்த போது சமீபத்தில் எலிமினேஷனான ரவீனா தான் மணிக்காக தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவரது நட்பு வட்டாரங்களில் மணிக்கு அவர் வாக்குகள் சேகரிப்பதால் தான் அதிகமாக வாக்குகள் அவருக்கு பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ரவீனா தரப்பு இதனை மறுத்து உள்ளது.

இன்னும் இரண்டு நாளில் ஏதேனும் திருப்பம் ஏற்படுமா? டைட்டில் வின்னர் யாரும் எதிர்பாராத ஒருவருக்கு செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர்  'சிஸ்டர்'.. மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் திரைப்படத்திற்கு “சிஸ்டர்” என தலைப்பிடப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது.

மீண்டும் ஒரு மிட்வீக் எலிமினேஷனா? இம்முறை சிக்கும் போட்டியாளர் இவரா?

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் நேற்று திடீரென மிட்வீக் எவிக்சன் நடந்தது என்பதும் அதில்  விஜய் வர்மா எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பதையும் பார்த்தோம்.

விஜய்சேதுபதியின் 'மெர்ரி கிறிஸ்துமஸ்'.. முதல் விமர்சனம் கொடுத்த பிரபல தமிழ் இயக்குனர்..!

விஜய் சேதுபதி நடித்த நேரடி ஹிந்தி திரைப்படமான 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபல தமிழ் இயக்குனர் தனது பாராட்டுகளை

நயன்தாராவின் 'அன்னபூரணி' படத்தில் சர்ச்சை காட்சி: நெட்பிளிக்ஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அன்னபூரணி' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

நீங்க எங்கேயோ இருக்கீங்க.. எனக்கு தாங்க முடியாத அடி.. அர்ச்சனாவிடம் வன்மத்தை கக்கும் மாயா..!

 பிக் பாஸ் ஏழாவது சீசன் போல் வேறு எந்த சீசனிலும் போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் மீது வன்மத்தை கக்கியது இல்லை என்று பார்வையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.