பிரசவம் பார்த்த டாக்டருக்கு நன்றி சொன்ன பிக்பாஸ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான சுஜா வருணி, சிவாஜி பேரன் சிவகுமாரை கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானார். இந்த நிலையில் அவருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி அழகான ஆண்குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக சிவகுமார் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்
இந்த நிலையில் முதல்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சுஜா, தனக்கு பிரசவம் பார்த்த டாக்டர் கனிமொழிக்கு நன்றி கூறியுள்ளார். தனக்கு சுகப்பிரசவம் ஆக டாக்டர் கனிமொழி கொடுத்த அறிவுரைகள் தான் காரணம் என்றும் அவர் தனக்கு டாக்டராக கிடைத்தது கடவுளின் ஆசிர்வாதம் என்றும் சுஜா கூறியுள்ளார். மேலும் டாக்டர் கனிமொழி போல் ஒரு சிறந்த மருத்துவரை தான் வாழ்நாளில் சந்தித்ததில்லை என்று கூறிய சுஜா, அவர் தனக்கு டாக்டராக மட்டுமின்றி தாயாகவும் இருந்ததாக தெரிவித்தார்.
பெற்றோர்களாக பதவியுயர்வு பெற்ற சிவகுமார் - சுஜா தம்பதிக்கு பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
MySincere Txs to Dr.Kanimozhi,I am truly Blessed to be guided by her therapy.She is the Best Dr,I have ever met in my life.Besides being a Dr,she has taken an utmost care as mother,being with me always.I am truly Blessed to have myChild been brought to see theworld,by her hands?? pic.twitter.com/fCidMNAmYB
— SujaVaruneeShivakumar (@sujavarunee) August 23, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments