பிக்பாஸ் ஷிவானியின் 'நத்திங் ஸ்பெஷல்' புகைப்படம்: இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Wednesday,April 07 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகை ஷிவானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்கள் வைரலாகும் என்பது தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் அவர் மாலத்தீவு சென்ற போது அங்கிருந்து பதிவுசெய்த புகைப்படங்களும் வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவர் அணிந்திருந்த டீசர்ட்டில் ’நத்திங் ஸ்பெஷல்’ என்ற வார்த்தைகள் உள்ளன என்பதும் அவர் கேப்ஷனாக ’அவருடைய உடலில் வலிமையும் கண்ணியமும் உள்ளது’ என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷிவானி தனது இன்ஸ்டாவில் இந்த புகைப்படத்தை பதிவு செய்த ஒரு மணி நேரத்துக்குள் சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் தலைவி, சிங்கப் பெண்ணே. குயின் ஆஃப் மில்லியன் ஹார்ட்ஸ், உள்பட பல்வேறு கமெண்ட்ஸ்கள் இந்த புகைப்படத்திற்கு வழக்கம்போல் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.