விபூதி, குங்குமத்துடன் பக்தையாக மாறிய ரம்யா பாண்டியன்: ஆஜித், அர்ச்சனா, சம்யுக்தாவின் கமெண்ட்ஸ்கள்!

  • IndiaGlitz, [Tuesday,March 16 2021]

’ஜோக்கர்’ உள்ளிட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் தமிழக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதன்பின் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார் என்பதும் அவருக்கு ஆர்மிகளும் ஆரம்பிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வந்த ரம்யா பாண்டியன், திடீரென இன்று பக்தி பழமாக மாறி, விபூதி, குங்குமத்துடன் கோவில் ஒன்றில் குளம் அருகே எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கலந்துகொண்ட சக போட்டியாளர்களான சம்யுக்தா, அர்ச்சனா, ஆஜித் உள்ளிட்டோர் ’பியூட்டி’ ’அழகு’ என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளனர்.

தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நடித்துவரும் ரம்யா பாண்டியன் வேறு சில படங்களிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அந்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.