மார்டன் லுக்கில் பிக்பாஸ் நடிகை… டிரெண்டிங்கிங் புகைப்படம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல இளைஞர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியவர் ஜுலி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்தப் போட்டியின் போது வெடித்த சில சர்ச்சைகளினால் இவருக்கு ஆதரவுகளோடு எதிர்ப்புகளும் கிளம்பின.
இப்படி வெடித்த சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஜுலி சில தொலைக்காட்சிகளில் தலைக்காட்டத் தொடங்கினார். அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி திரைத்துறையிலும் இவர் கால் பதித்தார். இதுவரை “அம்மன் தாயி“, “அனிதா பயோபிக்“ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் புதுவரவாக வரவிருக்கும் “பப்ஜி பொல்லாத உலகத்தில் பயங்கர கேம்“ எனும் புது படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.
திரைத்துறை ஒரு பக்கம் இருக்க, ஜுலி தொடர்ந்து சமூக வலைத்தளத்திலும் படு பிசியாகவே இருந்து வருகிறார். விதவிதமான தீம்களில் இவர் புதுப்புது போட்டோ ஷுட்களை நடத்தி அதைத் தனது டிவிட்டரில் பதிவிட்டும் வருகிறார். அதனால் எப்போதும் டிரண்டிங்கிலேயே ஜுலி இருந்து வருகிறார். கடந்த வாரம் மணக்கோலத்தில் போட்டோ வெளியிட்ட இவர் தற்போது மார்டன் லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் புகைப்படம் தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
“Optimism is the faith that leads to achievement. Nothing can be done without hope and confidence.” pic.twitter.com/J53u49tDEV
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) December 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com