நிழலில் கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் ஜூலி: வைரலாகும் புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வீராங்கனையாக தமிழக மக்களின் நன் மதிப்பை பெற்றவர் ஜூலி என்பது தெரிந்ததே. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட சில நாட்களிலேயே அவர் தனது பெயரை கெடுத்துக் கொண்டார். அதுமட்டுமின்றி ஓவியாவை தேவையில்லாமல் சீண்டி, ஓவியா ஆர்மியின் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டார் என்பதும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது அவர் தனது ஒட்டுமொத்த இமேஜை இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சில மாதங்கள் கழித்து ஒரு சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் ஜூலி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் தனது கவர்ச்சியான நிழல் படங்களை பதிவு செய்துள்ளார்.
விதவிதமான போஸ்களில் அவர் பதிவு செய்துள்ள இந்த கவர்ச்சியான நிழற்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் ஜூலியா இது? என்று ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Spooky silhouettes
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) December 25, 2020
Merry Christmas to all
??❤?????? pic.twitter.com/kdrQQGEsr9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments