ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்.. அதில் ஒருவர் பிக்பாஸ் பிரபலம்..!

  • IndiaGlitz, [Tuesday,October 22 2024]

ஜெயம் ரவியின் அடுத்த படத்தை ‘டாடா’ இயக்குனர் கணேஷ்பாபு இயக்க இருக்கும் நிலையில், இந்த படத்தில் 2 பிரபலங்கள் இணைய உள்ளதாகவும், அதில் ஒருவர் பிக்பாஸ் பிரபலம் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தை ’டாடா’ இயக்குனர் கணேஷ் பாபு இயக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார் என்றும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் ரத்னகுமார் பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ’ஆடை’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் பணிபுரிந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் 34வது படத்தில் கூடுதல் திரைக்கதை ஆசிரியராக பணிபுரியவுள்ளார்.

அதேபோல், இந்த படத்தில் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனரா பிக்பாஸ் மாயா? எந்த படத்தில் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' மற்றும் 'லியோ' ஆகிய திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் பிக்பாஸ் மாயா நடித்திருப்பார் என்பது தெரிந்தது.

இவருக்கு பதில் இவர்.. குக்கிங் ஷோவில் இருந்து விலகிய சீதா.. என்ட்ரி ஆன 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை..!

சீரியல்களில் அவ்வப்போது இவருக்கு பதில் இவர் என கேரக்டர் மாற்றம் என்பது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிலையில் தற்போது ரியாலிட்டி ஷோவிலும் இவருக்கு பதில் இவர் என்ற மாற்றம் நடந்துள்ளது

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது 'லப்பர் பந்து'.. தேதியை அறிவித்த ஹாட்ஸ்டார்..!

அட்டகத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த 'லப்பர் பந்து' என்ற திரைப்படம் செப்டம்பர் மாதம் திரையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், இந்த படம் 50 கோடி ரூபாய்

2025 ல் எந்த தொழில் சிறப்பாக இருக்கும்.? Jothidar A.R.Balakrishna Reddy

புகழ்பெற்ற தெய்வீக ஜோதிடர் A.R. Balakrishna Reddy அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பல முக்கியமான ஆன்மீக கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார்.

ஜோதிடத்தில் திதி என்றால் என்ன? அதில் சுபகாரியங்கள் செய்வது நல்லதா?

திதி என்றால் என்ன? திதி எப்படி பார்ப்பது? திதி தேவதைகளின் சக்தி என்ன? பஞ்சமி திதியில் என்ன செய்யலாம்?