பிக்பாஸ் தினேஷ்-க்கு அம்மா அப்பா சொன்ன குட் நியூஸ்.. இதுதான் லைஃப் டைம் கிப்ட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீரியல் நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் தினேஷின் அம்மா அப்பா அவருக்கு பரிசு கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் நடிகராக அறிமுகமான தினேஷ். அதே சீரியலில் நடித்த ரச்சிதா மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் 2015 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் 2020 ஆம் ஆண்டு இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதாவும், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷும் கலந்து கொண்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இருவரும் ஒன்று சேருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அந்த நிகழ்வும் நடைபெறவில்லை என்பது தினேஷுக்கு ஏமாற்றமாகவே இருந்தது.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய பெற்றோர் தனக்கு கார் பரிசளித்துள்ளார்கள் என்றும் என் வாழ்க்கையில் கிடைத்த பெஸ்ட் கிப்ட் இதுதான் என்றும் நெகிழ்ச்சியுடன் தினேஷ் தனது இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெற்றோருடன் உள்ள புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout