பிக்பாஸ் தர்ஷனின் முதல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு: நாளை டீசர் வெளியீடு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் என்பவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் கடைசி நேரத்தில் அவர் போட்டியில் வெளியேற்றப்பட்டார். இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பிக்பாஸ் டைட்டில் வென்ற முகினைவிட தர்ஷனுக்கு அதிக ரசிகர்கள் கிடைத்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் தினத்தில் கமலஹாசன் அவர்கள் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்ஷனை ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்வதாக அறிவித்து ஒப்பந்த பத்திரத்தையும் தர்ஷன் கையில் கொடுத்தார். மேலும் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்திலும் தர்ஷனுக்கு ஒரு முக்கிய கேரக்டர் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது தர்ஷன் ஒரு மியூசிக் ஆல்பத்தின் நடித்துள்ளார். ’தாய்க்கு பின் தாரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் ஆல்பத்தின் தர்ஷன் உடன் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆயிஷா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த மியூசிக் ஆல்பத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாகவும் இந்த ஆல்பம் சித்ஸ்ரீராம் தரண் குமார் இசையில் உருவாகியுள்ளவும் இந்த ஆல்பத்தில் நடித்ததால் தனது கனவு நனவாகியுள்ளதாகவும், தனது சமூக வலைத்தளத்தில் தர்ஷன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Finally the wait is over! It is my honor to be part of this First ever Musical Ballad #தாய்க்குப்பின்தாரம்!
— Tharshan Thiyagarajah (@TharshanShant) August 26, 2020
Its such an honor that humbles me to perform for the Voice of @sidsriram and the composition of @dharankumar_c ! It cannot get any better and my dream came true moment! pic.twitter.com/wWsn8OXiQn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments