பிக்பாஸ் தனலட்சுமிக்கு அம்மா அனுப்பிய லீகல் நோட்டீஸ்..! இது புதுவிதமா இருக்குதே..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமிக்கு அவரது அம்மாவே வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தனலட்சுமி என்பதும் இவர் 77 நாட்கள் தாக்கு பிடித்து விளையாடினார் என்பதும் தெரிந்தது. மேலும் இவர் மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்ட முதல் போட்டியாளர் என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவருக்கு வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கோபக்காரி என்ற முத்திரையும் குத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக் பாஸ் தனலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு தனது அம்மா லீகல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறியுள்ளார். இனிமேல் தனக்கும் தன்னுடைய அம்மாவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் அம்மாவின் பெயரை தான் எங்கேயும் பயன்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தனலட்சுமி கூறியுள்ளார்.
இதுவரை கணவன் மனைவி பிரியும் லீகல் நோட்டீஸ் தான் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், இது புது விதமாக இருக்குதே, அம்மா மகளுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்புகிறாரா என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.
இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்பதை நான் சொல்ல விரும்பவில்லை என தனலட்சுமி கூறி உள்ளதை அடுத்து என்ன பிரச்சனையாக இருக்கும் என்று நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout