வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய பிக்பாஸ் தனம்.. வீடியோவை பார்த்த ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Thursday,January 12 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான தனலட்சுமி வித்தியாசமான முறையில் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதும் இந்த நிகழ்ச்சி தற்போது நிறைவு கட்டத்தை எட்டிவிட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மக்களின் பிரதிநிதியான தனலட்சுமிக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்திலிருந்து அபாரமாக தனலட்சுமி விளையாடி வந்தார் என்பதும் ஆண் போட்டியாளர்களுக்கு நிகராக டாஸ்குகள் உள்பட அனைத்தையும் விளையாடி கமலஹாசனிடமும் பார்வையாளர்களிடமும் பாராட்டைப் பெற்றார். குறிப்பாக தனக்கு அசீமால்அநீதி நிகழ்ந்த போது அதை எதிர்த்து தைரியமாக வாதாடினார்.

இந்த நிலையில் 70 நாள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்த தனலட்சுமி எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் லோகோவை தனது கையில் அவர் டாட்டூ வரைந்ததை வீடியோவாக வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் அந்த அளவு காதலிப்பதாக குறிப்பிடும் வகையில் அவர் இந்த டாட்டுவை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

More News

'துணிவு', 'வாரிசு': முதல் நாள் வசூலில் முந்தியது யார்?

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இரண்டு திரைப்படங்களையும்

'துணிவு' , 'வாரிசு' சிறப்பு காட்சிகளில் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நேற்று வெளியாகியது என்பதும் இரண்டு படங்களுக்குமே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது

போர் நடக்கும்போது படமாக்கப்பட்ட பாடல்.. 'நாட்டு நாட்டு' குறித்த அரிய தகவல்!

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் எம்எம் கீரவாணி இசையில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்'  படத்தில் இடம்பெற்ற  'நாட்டு நாட்டு'  என்ற பாடல் கோல்டன் குளோப் விருது பெற்றது என்பதை ஏற்கனவே

அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும்.. போனிகபூர் வாரிசு தெரிவித்த விருப்பம்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என 'துணிவு' படத்தின் தயாரிப்பாளரான போனிகபூரின்

மாரி செல்வராஜின் 'வாழை' படத்தின் செம அப்டேட்!

இயக்குனர் மாரி செல்வராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'வாழை' என்ற திரைப்படத்தை தொடங்குவதாக அறிவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.