close
Choose your channels

'காவாலா' பாடலுக்கு டான்ஸ் ஆடிய பிக்பாஸ் தனலட்சுமி.. நெட்டிசன்களின் வேற லெவல் கிண்டல்..!

Thursday, July 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. தமன்னாவின் கிளாமர் டான்ஸ் மிகப் பெரிய அளவில் வைரலான நிலையில் இந்த பாடலுக்கு பல திரையுலக பிரபலங்கள் நடனமாடிய வீடியோ வைரலானது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பாடலுக்கு நடமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்

‘கண்றாவியா இருக்குது’ என்றும், அன்ஃபாலோ செய்ய போறேன்’ என்றும், ’அந்த ஸ்டெப்புக்கு இருந்த டிரெண்டை காலி பண்ணிட்டிங்களே’ என்றும், ’சத்தியமா நல்லா இல்ல, போயிடு’ என்றும் கமெண்ட் பதிவாகி வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் இந்த டான்ஸுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

தனலட்சுமி மட்டுமின்றி பல சின்னத்திரை மற்றும் பெரிய திரை பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment