சிறுமிகளிடம் சில்மிஷமா? வக்கீல் மூலம் எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ் டேனியல்!

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய டேனியல் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இதுகுறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனது வக்கீல் மூலம் டேனியல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டேனியல் அந்த நிகழ்ச்சியில் 70 நாட்களுக்கு பின்னர் வெளியேறினார் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஒரு சில நாட்களில் அவர் தான் காதலித்து வந்த டெனிசா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் டேனியல் சிறுமிகளுடன் பாலியல் ரீதியாக பேசியதாகவும் அவர் இதேபோன்று நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் வதந்திகள் கிளம்பின. இந்த வதந்திகள் குறித்த ஸ்கிரீன் ஷாட் படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இதுகுறித்து தனது மறுப்பை டேனியல் தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து டேனியல் வக்கீல் வெளியிட்டுள்ள நோட்டீஸ் ஒன்றில் ’பிக்பாஸ் டேனியல் மீது முகாந்திரம் இல்லாத பொய்யான குற்றச்சாட்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டு சுமத்துவோர் மற்றும் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

டேனியல் தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் ’லாபம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

More News

போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரித்த இளைஞர் கைது!

கிருஷ்ணகிரி ஒட்டிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பல ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் ரேஷ்மாவா இவர்? டீன்ஏஜ் பெண் போல் மாறிய அதிசயம்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரேஷ்மா என்பதும் இவர் 'வேலை வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் சூரியுடன் காமெடி வேடத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தா

சன்னிலியோன் நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம்: படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்ற செய்தியை

35 வயது இளம் நடிகர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சியில் திரையுலகம்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்

அறிக்கையில் கொரோனா டெத் 78… ஆனால் உண்மையில் 650… பகீர் ஏற்படுத்தும் குஜராத் ரிப்போர்ட்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து இருக்கிறது.