பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசனின் புதிய குடும்ப உறுப்பினர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு இன்று 63வது பிறந்த நாள் என்பதால் அவருக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மற்ற வருட பிறந்த நாட்களை விட இந்த வருட பிறந்த நாள் கமல்ஹாசனுக்கு வித்தியாசமான புதுமையான பிறந்த நாள் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் கமல்ஹாசன் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரையுமே அவர் பங்கேற்பாளர்களாக பார்க்காமல் தனது குடும்ப உறுப்பினர்களாகவே பார்த்தார். ஒவ்வொரு பங்கேற்பாளரும் வெளியேறும்போது அவர்களுக்கு வாழ்க்கை முறையையும் அறிவுரையையும் சொல்லி அனுப்பினார். அதேபோல் பங்கேற்பாளர்களும் கமல்ஹாசனை தனது குடும்பத்தில் உள்ள பெரியவருக்கு கொடுக்கும் மரியாதையை கொடுத்தனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் குடும்பத்தினர்களும் இன்று தங்களது டுவிட்டரில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆரவ்:'பிறந்தநாள் வாழ்த்துகள் உலகநாயகன் பத்மஶ்ரீ கமல்ஹாசன் சார். என்னை வடிவமைத்துக் கொண்டிருப்பதற்கு நன்றி
நடிகை ஆர்த்தி: ஒன் அண்ட் ஒன்லி பிக்பாஸ் 'நம்மவர்'! ஆளப்போறார் ஆண்டவர்!'
சுஜா வருணி: உங்களை அப்பா என்றழைக்கும் அந்த மூன்று சொல் மந்திர பாக்கியத்தை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி - உங்கள் அன்பு மகள் சுஜா வருணி'
காஜல்: மை டியர் கமல் சார், நீங்க ஒரு டேலன்ட் பேக்கேஜ். உங்களது 60 வயசு தாண்டிடுச்சுனு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க. இப்போ பார்க்கிறதுக்கு 30 ப்ளஸ் மாதிரி இருக்கீங்க
காயத்ரி: 'மிக விரைவில் நீங்கள் பெரிய அரசியல்வாதியாகி, மக்களுக்கு நல்லது செய்வதைப் பார்ப்பேன் எனும் நம்பிக்கை இருக்கிறது. எங்கள் குடும்பத்தினரின் சார்பாக அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com