அனிதாவுக்கு எதிராக பிக்பாஸ் போட்டியாளர்கள்: சுரேஷ் தந்திரம் பலித்துவிட்டதா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 நாட்களாக அனிதா சுரேஷ் சக்கரவர்த்தி பிரச்சனை தான் ஓடிக்கொண்டு இருக்கின்றது. செய்தி வாசிப்பவர்கள் முன் நான் நிற்க மாட்டேன், அவர்கள் வணக்கம் கூறும் போது எச்சில் தெறிக்கும் என்று தெரிந்து கூறினாரா அல்லது வேண்டும் என்றே கூறினாரோ தெரியவில்லை. சரியாக செய்தி வாசிப்பாளர் அனிதாவின் முன் சுரேஷ் கூறியதும், அனிதா-சுரேஷ் ஆகிய இருவருக்கும் பிரச்சினை பற்றிக்கொண்டது

அதிலிருந்து தினசரி புரமோவிலும் சரி, ஒரு மணி நேர புரோக்ராமிலும் சரி அனிதா-சுரேஷ் விவகாரம் தாம் தான் பெரும்பாலும் ஆக்கிரமித்து கொள்கிறது. அவர்கள் இருவரும் திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ மாறி மாறி புரமோவில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்ப மற்ற போட்டியாளர்கள் வேடிக்கை பார்க்கவா பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார்கள்?

நேற்று இரண்டு புரமோவிலும் இன்று வெளியான இரண்டு புரமோவிலும் அனிதா, சுரேஷ் பிரச்சனைதான் இருந்த நிலையில் தற்போது மூன்றாவது புரமோவிலும் அனிதா-சுரேஷ் பிரச்சனை தான் உள்ளது

ஆனால் தற்போது சற்று இந்த விவகாரம் சற்று திசை திரும்பி உள்ளதாக தெரிகிறது. சுரேஷ்க்கு ரேகா, சனம்ஷெட்டி உள்பட ஒருசில போட்டியாளர்கள் ஆதர்வு தெரிவித்துள்ளனர். சுரேஷின் தந்திரம் பலித்துவிட்டதா? அனிதாவின் கண்ணீருக்கு வேல்யூ இல்லையா? என்று எண்ண தோன்றுகிறது

எப்படியோ இன்றைய நிகழ்ச்சியுடனாவது அனிதா-சுரேஷ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பிக்பாஸ் வீட்டில் வேறு பிரச்சினையை ஆரம்பியுங்கள், போர் அடிக்கின்றது என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது

More News

ஆபாசத்திற்கும் கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியுமா? இரண்டாம் குத்து இயக்குனருக்கு ஒரு கேள்வி!

இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி முடித்துள்ள இரண்டாம் குத்து' என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசருக்கு கண்டனம் தெரிவித்து இயக்குனர் இமயம் பாரதிராஜா

கடவுள் எனக்கு கொடுத்த வரம் கொரோனா… அதிபரின் கருத்தால் ஆடிப்போன மக்கள்!!!

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சிகிச்சைக்கு நடுவில்,

அனிதா, சுரேஷ் ரெண்டு பேரும் புரமோவுல ஜெயிச்சிட்டாங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காம் சீசனில் வந்திருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் கடந்த 3 சீசன்களையும் பலமுறை பார்த்து, பயிற்சி எடுத்து வந்து இருப்பார்கள் போல் தெரிகிறது.

இதை பார்த்தெல்லாம் கண்ணு கூசலையா? பாரதிராஜாவுக்கு 'இரண்டாம் குத்து' இயக்குனர் கேள்வி!

இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய 'இரண்டாம் குத்து' என்ற திரைப்படம் குறித்து சற்று முன் கடுமையாக விமர்சனம் செய்த இயக்குனர் இமயம் பாரதிராஜா

அந்தப்பெண் கள்ளத்தொடர்பில் இருந்தார்…  ஹத்ராஸ் பாலியல் சம்பவம் குறித்து பாஜக பிரமுகரின் சர்ச்சை கருத்து!!!

உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி விறகு சேகரிக்க சென்ற 19 வயது இளம்பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடுமை செய்தது