பிரியங்கா- மணிமேகலை விவகாரம் குறித்து பேசும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. யார் மீது தவறு?

  • IndiaGlitz, [Tuesday,October 29 2024]

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதுகுறித்து மணிமேகலை வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் பார்த்தோம். மணிமேகலையின் குற்றச்சாட்டுக்கு இதுவரை பிரியங்கா எந்தவித பதிலையும் சொல்லாத நிலையில், இந்த சம்பவத்தை ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்து விட்டனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த விவகாரம் குறித்து விஜே விஷால் பேசும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மணிமேகலை பிரியங்கா பிரச்சனை குறித்து விஜே விஷால் கூறியபோது, ‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும்; அதை வெளியில் சொன்னால், அது வேறு விதமாக மாறிவிடும். எனவே இது தேவையில்லாதது.

இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாம் இருக்கிறோம் என்றால் நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம், ஆனால் அதை வெளியே சொல்ல கூடாது, மக்களை எப்படி என்டர்டெயின்மென்ட் பெற வேண்டும் என யோசிக்க வேண்டும். அதுபோல, மணிமேகலையும் அந்த நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்களை வெளியே சொல்லியிருக்கக் கூடாது. பிரியங்கா அதை கண்டு கொள்ளவில்லை என்பது நல்ல விஷயம். மணிமேகலை இதை பற்றி பேசியிருக்க வேண்டாம் என்று பின்னாளில் யோசிப்பார் என்று கூறினார். அவர் கூறியதை ஜெப்ரி மற்றும் சாச்சனா கேட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.