கருணாநிதி மறைவு செய்தி கேட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பவர்கள் வெளியுலக தொடர்பே இல்லாமல் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும், நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தியை பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு தெரிவித்தார். சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியான இன்றைய புரமோ வீடியோவில் பிக்பாஸ் கூறியதாவது:

'தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி இன்று மாலை காலமானார். தமிழுக்கும் தமிழினத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் போற்றத்தக்கது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்துவோம் என்று பிக்பாஸ் கூறியதும் அனைத்து போட்டியாளர்களும் எழுந்து நின்று அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிக்பாஸ் விதிமுறைகளை மீறி மறைந்த ஒரு மாபெரும் தலைவரின் மறைவு செய்தியை பிக்பாஸ் போட்டியாளர்களிடம் தெரிவித்த பிக்பாஸ் நிர்வாகத்தினர்களுக்கு பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து முதல்முறையாக பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.