கோபம் வரும்போது என்ன செய்ய வேண்டும்? புத்தாண்டு ரெசல்யூஷன் சொல்லும் போட்டியாளர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை தாண்டி விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் நாளை புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்களுக்கு பரிந்துரை செய்யும் புத்தாண்டு ரெசல்யூஷன் என்ன? என்று கமல் கேட்கிறார்.
இதனை அடுத்து ஒவ்வொரு போட்டியாளர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கின்றனர். முதல் கட்டமாக மணி கூறும்போது அர்ச்சனா வலிமையான பிளேயர் தான், ஆனால் அதே நேரத்தில் தேவையில்லாமல் அழுவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
தினேஷ் எழுந்து நிக்சனின் பிளே லிஸ்ட்டில் ஒரு 50 பாட்டு கேட்க வேண்டும் என்று கூறினார். மணியை ஒரு டான்ஸ் மாஸ்டராக பார்க்க வேண்டும் என்று விஷ்ணு கூறினார். விஷ்ணு கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நிக்சன் கூறினார்.
அப்போது கமல்ஹாசன் கோபம் வரும்போது 10 எண்ண வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் ஒன்று எண்ணிவிட்டு இன்னும் 9 தான் இருக்கிறது, எண்ணி முடித்து உன்னை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறக்கூடா,து உண்மையிலேயே கோபத்தை சாந்தப்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments