பூர்ணிமாவிடம் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து விளக்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக நான் தான் வருவேன் என நம்பிக்கை உடன் இருக்கும் விக்ரம் சரவணன் பூர்ணிமாவிடம் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரம் சரவணன் தனக்குத் தானே பேசிக் கொண்ட வீடியோ வெளியானது. அதில் தான் நன்றாக விளையாடிருப்பதாகவும், டாஸ்க்கிலும் நன்றாக செய்திருப்பதாகவும் விசித்ராவிடம் தைரியமாக சண்டை போட்டதாகவும் தனக்கு தானே பெருமையாக பேசிக்கொண்டார். ஆனால் விசித்ராவுடன் அவர் சண்டைபோட்டபோது விசித்ரா அவரை எப்படி நோஸ்கட் செய்தார் என்பது நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்
ஆனால் விக்ரம் சரவணன் தன்னுடைய விளையாட்டு குறித்து தனக்கே பெருமையாக இருப்பதாகவும் அனேகமாக இந்த சீசன் டைட்டில் வின்னராக நான் தான் வருவேன் என்றும் கூறியிருந்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி, பார்வையாளர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.
இந்த நிலையில் விக்ரம் சரவணன் பூர்ணிமாவிடம் பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டில் வந்ததிலிருந்து நான் ஒரு மாதிரி இருந்தேன். ஆனால் நீ என்னை கட்டிப்பிடித்த உடன் எனக்கு கொஞ்சம் தெம்பு வந்தது, அது என்னவென்று எனக்கு சொல்ல தெரியவில்லை என்று கட்டிப்பிடி வைத்தியம் குறித்து கூறினார். இதை கேட்டு பூர்ணிமா அவரது கையைப் பிடித்துக் கொண்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். அதன் பிறகு விக்ரம் குறித்து பெருமையாக பூர்ணிமா சொல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது.
#Vikram to #Poornima : Nee hug kudukum podhu warm ah feel achu#BiggBossTamil7 #BiggBoss7Tamil#BiggBossTamil pic.twitter.com/0pVLtV3E70
— Akshay (@Filmophile_Man) November 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments