கருணாநிதிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் இரங்கல்
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தி குறித்து பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் கருணாநிதியின் புகழை ஒவ்வொருவரும் கூறி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் காட்சிகள் உள்ளன.
கருணாநிதி குறித்து டேனியல் கூறும்போது, 'தமிழக மக்களே என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக வந்து உங்களுக்கு கைகொடுப்பேன்' என்று கூறியவர் கருணாநிதி என்று கூறினார்.
பாலாஜி கூறியபோது, 'தமிழ் என்ற வார்த்தையை உச்சரித்தவுடனே நமது முகத்திற்கு முன்னர் கருப்புக்கண்ணாடியும் மஞ்சள் துண்டும் தான் ஞாபகம் வரும்' என்று புகழாரம் சூட்டினார்.
மற்ற போட்டியாளர்கள் என்ன கூறினார்கள் என்பதை இன்றிரவு நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் என்று சொன்னாலே நமக்கு ஞாபகத்திற்கு வருபவர் திரு. மு. கருணாநிதி அவர்கள்! ?????? #பிக்பாஸ் - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/ANSNUifunV
— Vijay Television (@vijaytelevision) August 8, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments