உள்ளே சண்டை வெளியே நட்பு: பிக்பாஸ் போட்டியாளர்களின் வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் போட்டியாளர்கள் முதல் சீசனில் இருந்து 5-வது சைசன் வரை உள்ள 100 நாட்களில் காரசாரமாக சண்டை போட்டுக்கொண்டாலும் வெளியே வந்த அடுத்த நிமிஷமே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் இந்த 5வது சீசனிலும் மிக அதிகமாக சண்டை போட்டவர்கள் பிரியங்கா மற்றும் நிரூப், பிரியங்கா மற்றும் தாமரை என்பது தெரிந்ததே. குறிப்பாக பிரியங்கா மற்றும் நிரூப் ஆகிய இருவருக்கும் காரசாரமாக சண்டை நடந்தது என்பதும் அவர்கள் போடும் சண்டையை பார்த்த போது இனிமேல் இவர்கள் ஜென்மத்திற்கும் இணைய மாட்டார்கள் என்றும் கூறப்பட்டது
ஆனால் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே சமாதானமாகி விட்ட பிரியங்கா மற்றும் நிரூப், தற்போது வெளியே வந்த பின்னரும் நட்புடன் இருப்பதை பார்க்க முடிகிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளே பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் ஆகியோர் ஹோட்டல் ஒன்றில் உட்கார்ந்து ஒற்றுமையாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது
பிக்பாஸ் என்பது ஒரு விளையாட்டு. அதில் விளையாடும் வரைதான் போட்டி மற்றும் சண்டை. பிக்பாஸ் விளையாட்டு முடிந்த பின்னர் எப்பொழுதும் போல் நட்பு பாராட்டி வருவது முதல் சீசனில் இருந்து நடந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com