எனக்கு தடை நீங்க தான்.. நான் செஞ்சது புல்லின்னா நீங்க செஞ்சதும் அதுதான்: பிக்பாஸை குறை சொன்ன போட்டியாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் தான் எனக்கு தடையானவர், நான் மற்றவர்களுக்கு செஞ்சது புல்லி என்றால் நீங்கள் எனக்கு செய்தது புல்லி என போட்டியாளர் ஒருவர் பிக் பாஸ் மீது குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் பலவிதமான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ’நீங்கள் பிக் பாஸ் டைட்டில் பட்டம் வென்றால் உங்கள் வெற்றிக்கு சாதகமாக இருந்தது யார்? தடையாக இருந்தது யார்? என இருவரை கூற வேண்டும் என்ற டாஸ்க் வைக்கப்பட்டது.
அப்போது பூர்ணிமா பேச வந்த போது ’எனது வெற்றிக்கு சாதகமாக இருந்தது மாயா தான், எனக்கு 50 லட்சம் பரிசு கிடைத்தால் அதை அவருக்கு கொடுத்து விடுவேன்' என்று தெரிவித்தார். மேலும் ’எனக்கு தடையாக இருந்தது பிக் பாஸ் தான்’ என்று கூற சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
‘நான் விக்ரமுக்கு காக்ரோச் என்ற பட்டம் கொடுத்தது தவறுதான், அதற்காக நான் மன்னிப்பு கேட்டு விட்டேன், ஆனால் எனக்கு விருப்பமே இல்லாமல், எனக்கு தவளை என்ற டேக் கொடுத்தது பிக் பாஸ் தான், அனன்யா எனக்கு அதை கொடுத்தாலும் அதற்கு நீங்கள் தான் காரணம். அதை நான் இரண்டு நாள் என் தலையில் விருப்பமின்றி வைத்திருந்தேன். அப்போது நான் மிகவும் அசெளகரியமாக உணர்ந்தேன். இதுபோல் பலமுறை நான் நோகடிக்கப்பட்டேன்
நான் இந்த வீட்டில் பூமர் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று நினைத்திருந்தேன், ஆனால் நீங்களே பூமர் அங்கிள் என்ற ஒரு டேக்கை கொடுத்து அனுப்பி விட்டீர்கள். நான் மற்றவர்களுக்கு செய்தது புல்லி என்றால். நீங்கள் எனக்கு செய்தது புல்லி தான், அதனால் எனக்கு மற்றவர்களை விட நீங்கள் தான் அதிகமாக தடையாக இருந்தீர்கள், ஆனால் அந்த தடையையும் மீறி நான் டைட்டில் பட்டம் வென்றுள்ளேன்’ என பிக் பாஸ் இடம் நேரடியாகவே அவர் தனது புகாரை தெரிவித்தார்,.
பூர்ணிமா இவ்வாறு பேசி முடித்தவுடன் விசித்ரா எழுந்து அவரை கட்டிப்பிடித்து ’நீ சொன்னது எல்லாமே சரிதான், மிகவும் தைரியமான பெண்’ என்று வாழ்த்து கூறினார்.
#Poornima brought up the stupid tags BB gave and called him out on it and mentioned him as the person who has hurt her the most in BB. BRUTAL!! 🔥🔥🔥
— Zan (@RakitaMode) December 25, 2023
Every season the BB team does this. The guts to call it out! 💯🔥#BiggBossTamil7 #PhoenixPoornima #BiggBossTamil pic.twitter.com/KDIlNFnNVQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com