முரட்டு சிங்கிள்ஸ்களை வெறுப்பேத்தும் பிக்பாஸ் போட்டியாளரின் மனைவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் தமிழ் நடிகருமான கணேஷ் வெங்கட்ராமனின் மனைவி நிஷா கிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ, முரட்டு சிங்கிள்ஸ்களை வெறுப்பேற்றும் வகையில் உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான மகாபாரத தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான நிஷா கிருஷ்ணன், சூரிய வணக்கம் உள்பட பல டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளரான கணேஷ் வெங்கட்ராமனை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2019ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நிஷா கிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கணேஷ் தனது மனைவிக்கு நிஷாவுக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் உள்பட ரொமான்ஸ் காட்சிகள் உள்ளன. இதற்கு கேப்ஷனாக ’சிங்கிள்ஸ்களை வெறுப்பேற்றும் வீடியோ என்று நிஷா பதிவு செய்ததை அடுத்து ’உண்மையிலேயே வெறுப்பேற்றி விட்டீர்கள்’ என்று கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com