ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதலா? கதையை கேட்டு கண்கலங்கிய ரக்சிதா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள திருநங்கை ஷிவின் வாழ்க்கையில் இப்படி ஒரு காதலா என அவருடைய காதல் கதையை கேட்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ஷிவின் என்பதும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை உண்மையாகவே புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொம்மை டாஸ்க்கின் போது அசீம் கிண்டல் செய்த போதும் அதனை பொருட்படுத்தாமல் ஷிவின் டாஸ்க்கை சரியாக விளையாடுவதில் மட்டுமே குறியாக இருந்தார். அதனை அடுத்து கமல்ஹாசனே அவருக்கு பாராட்டினார் என்பதும் அவருக்கு ஒரு அண்ணனாக நான் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷிவின் வாழ்க்கையிலும் ஒரு அற்புதமான காதல் கதை இருக்கிறது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் தனது ஒரே நெருங்கிய தோழியான ரக்சிதாவின் ஷிவின் தனது காதல் கதையை கூறியுள்ளார்.

தான் ஐடியில் வேலை பார்த்தபோது ஒருவருடன் நட்பாக பழகியதாகவும் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி விட்டதாகவும் கூறினார். தங்கள் காதல் பிரச்சினை இல்லாமல் நன்றாக சென்று கொண்டு இருந்த போதுதான் தான் காதலிப்பதை அம்மா கண்டுபிடித்து விட்டதால் ’காதல் எல்லாம் உனக்கு வேண்டாம், உன்னை பற்றிய விஷயம் அவங்க குடும்பத்துக்கு தெரிந்தால் உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த குடும்பத்தின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று கூறியதாகவும், அதனை எடுத்து அம்மாவின் பேச்சை கேட்டு தனது காதலை மறந்து விட்டதாகவும் கூறினார்.

தன்னுடன் தனது காதலர் அடிக்கடி பேச முயற்சி செய்தபோதிலும் தான் அவரிடம் பேசவில்லை என்றும் தற்போது அவர் சிங்கப்பூரில் அவர் இருப்பதாகவும் ஒருசில கெட்ட பழக்கத்துடன் இருப்பதாக கேள்விப்பட்டேன் என்றும் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றும் ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர் சந்தோஷமாக வாழ்ந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றும் கூறினார்.

ஷிவினின் காதல் கதையை கேட்டு கண்கலங்கிய ரக்சிதா அவருக்கு ஆறுதல் கூறினார்.