நீங்க அசீமை வெளியேற்ற மாட்டீங்க... பிக்பாஸ் மீது பழி சுமத்திய போட்டியாளர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் படலத்தின் போது நீங்கள் அசீமை எலிமினேட் செய்யமாட்டீர்கள், அதனால் நான் அவரை நாமினேஷன் செய்யவில்லை என ஒரு போட்டியாளர் பிக்பாஸ் மீதே பழி சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களில் ஒருசில போட்டியாளர்களை பிக்பாஸ் வேண்டுமென்றே காப்பாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் போட்டியாளர்கள் யாருமே இந்த குற்றச்சாட்டை பிக்பாஸ் மீது இதுவரை வைத்தது இல்லை என்பதும் பார்வையாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் மட்டுமே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த சீசனில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நிவாஷினி, நீங்கள் அசீமை வெளியேற மாட்டீர்கள் என்பதால் நான் அவரை நாமினேஷன் செய்யவில்லை என தனது நாமினேஷன் படலத்தின் போது கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பிக்பாஸ் தரப்பிலிருந்து அவருக்கு விளக்கம் அளிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதேபோல் அசல் கோலார் எலிமினேஷன் செய்யப்பட்டதும் நியாயமானது அல்ல என்று நிவாஷினி மீண்டும் பிக்பாஸ் மீது குற்றம் சுமத்தினார். இதிலிருந்து வாக்குகளின் அடிப்படையில் அசல் கோலார் வெளியேற்றப்படவில்லை என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கும் பிக்பாஸ் என்ன விளக்கம் அளிப்பார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.