நடிப்புல உங்கள தாண்டனும் சார்.. ஆசையை சொன்ன போட்டியாளருக்கு கமல் கூறிய பதில்..!

  • IndiaGlitz, [Sunday,December 24 2023]

நடிப்புல உங்கள தாண்டனும் சார் என்று போட்டியாளர் கூறியதற்கு கமல் கூறிய பதில் இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் வெளியாகியுள்ளது

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் போட்டியாளர்கள் தங்களை பினாலேவுக்கு தயாராக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரோமோவில் ’உங்களுடைய இலக்கு என்ன? என்று கமல் கேட்டார். அதற்கு ரவீனா ’வித்தியாச வித்தியாசமாக வேடங்களை போட்டுக் கொள்ள வேண்டும் என்று என்னுடைய ஆசை’ என்று கூறினார். அதற்கு கமல்ஹாசன் ’அதற்கு நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள், போட்டோஷூட் மட்டும் உங்களை மேம்படுத்தாது’ என்று கூறி போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுப்பது போல் செய்தார்.

இதனை அடுத்து விசித்ரா ’மனதுக்கு திருப்தியான கேரக்டர் நான் இதுவரை பண்ணினது இல்லை’ என்று கூறினார். அப்போது கமல் ’ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடி நீங்கள் இந்த மாதிரி ஒரு ஷோவில் வந்திருக்க முடியாது, இனி நீங்கள் தான் உங்கள் வாய்ப்பை தேடிக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

இதனை அடுத்து விக்ரம் சரவணன் ’சொன்னா ஒரு மாதிரி இருக்கும் சார், நடிப்பில் உங்கள தாண்டனும்ன்னு எனக்கு ஒரு ஆசை’ என்று கூறினார். அதற்கு கமல்ஹாசன் ’நீங்கள் சொல்லவில்லை என்றால் வேறு யார் சொல்வார்கள்? என்று கூறியதுடன் இன்றைய புரோமோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் இந்த வாரம் எந்த விதமான சர்ச்சைகளும் சண்டைகளும் இன்றி சுமூகமான வாரமாகவே முடிகிறது என்பது இன்றைய புரோமோக்களை பார்க்கும் போது தெரிய வருகிறது.

More News

எல்லா இனத்திலும் என் நண்பங்கைங்க இருக்காங்க.. ஜாதிய புகழ்ந்து பாடாத... 'வட்டார வழக்கு' டிரைலர்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாதி கொடுமைகள் குறித்த படம் வந்துள்ள நிலையில் அவற்றில் ஒன்றாக 'வட்டார வழக்கு' படம் இருந்தாலும் இந்த படத்தின் கதை, காட்சி அமைப்புகள், நட்சத்திரங்களின் நடிப்பு வித்தியாசமாக

இவங்க பினாலேயில என் கூட கண்டிப்பாக இருக்கணும்.. மாயா சொன்னது யாரை?

பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் 11 போட்டியாளர்கள் உள்ளனர். அனேகமாக அடுத்த வாரம் முதல் இரண்டு அல்லது

குடும்பங்கள் கொண்டாடும் ஷாருக்கானின் 'டங்கி': சர்வதேச அளவில் சிறப்பான வரவேற்பு..!

ரசிகர்களின் பாராட்டில், குடும்பங்கள் நண்பர்களோடு கொண்டாடும் அழகான சினிமா 'டங்கி' வார இறுதியில் 40% - 50% கூடுதலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாகவும்,

அடிச்சு கேட்டா கூட சொல்லாதீங்க.. காமெடி நடிகர் போண்டாமணி காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் திரை உலகின் பிரபல காமெடி நடிகர் போண்டாமணி காலமானார். அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டோர் ரூமில் ரவீனா காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. கொட்டிய ஆனந்தக்கண்ணீர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்திருந்தார்கள் என்பதும் குறிப்பாக கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களின் தாய், தந்தை உடன்பிறப்புகள் வந்திருந்தார்கள் என்பதையும்