கமல் முன் அசீமை வறுத்தெடுத்த போட்டியாளர்கள்: என்ன சொன்னார்கள் பாருங்கள்!
- IndiaGlitz, [Saturday,November 19 2022]
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த போட்டியாளர்களும் அசீமை கமல்ஹாசன் முன்னிலையில் வறுத்து எடுக்கும் காட்சியின் புரமோ வீடியோ சற்றுமுன் வெளிவந்துள்ளது.
இந்த வார டாஸ்க் குறித்து விசாரணை செய்யும் கமல்ஹாசன் தன் பதவிக்கு தகுதியே இல்லாத மாதிரி நடந்து கொண்டவர் யார்? என்ற கேள்வி கேட்கிறார். இதனை அடுத்து விக்ரமன் கூறியபோது, ‘படைத்தளபதி தான் என்று கூறுகிறேன். அதிகாரமும் கத்தியை வைத்து பயமுறுத்துவது மட்டுமே படைத்தளபதி வேலை இல்லை, அது அவருடைய வேலையே இல்லை என்று கூறினார்.
இதனையடுத்து தனலட்சுமி, ‘இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்ப பாருங்கள் என்ன பண்றேன் பாருங்க என்று எடுத்த மாதிரி இருந்தது என்று கூறினார்.
அதிகார வர்க்கம் அதிகமாக இருந்தது. அவருடைய தொனி, பேசும் பாணியில் அதிகாரம் இருந்தது என்று ஏடிகே கூறினார். ஆயிஷா கூறும்போது அவர் முழுக்க முழுக்க கேரக்டராக இருக்கவில்லை, பெர்சனலாக மட்டுமே இருந்தார். அவர் இந்த டாஸ்க்கில் சண்டை மட்டும்தான் போட்டார்’ என கூறுகிறார்.
கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் அசீமை குறை கூறுவதை கமல்ஹாசன் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day41 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/e1CYLrxzx4
— Vijay Television (@vijaytelevision) November 19, 2022