அசீம் வெளியேற வேண்டும்.. கமலிடம் கூறிய ஒட்டுமொத்த போட்டியாளர்கள்

அசீம் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த போட்டியாளர்கள் கமல்ஹாசனிடம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும் நிலையில் இந்த வாரம் நாமினேசன் செய்யப்பட்டிருந்த 7 போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கமல்ஹாசன் கேட்டபோதுதான் அசீம் தான் வெளியேறுவார் என்று நான் நினைக்கிறேன் என ஆயிஷா, மணிகண்டன், தனலட்சுமி, விஜே கதிரவன், ஷிவின், விக்ரமன் உள்பட பலரும் கூறுகின்றனர். மைனா ஒருவர் மட்டுமே நிவாஸினி போவார் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

இதனை அடுத்து இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பதை கமல் ஹாசன் அறிவிக்க இருக்கும் காட்சியுடன் இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்கு வருகிறது. 

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நிவாஸினி வெளியேறியுள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டாலும் அடுத்த வாரம் அசீம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக இன்றைய போட்டியாளர்களின் மனநிலையில் இருந்து தெரிய வருகிறது.

 

More News

'தளபதி 67' படத்தில் நரேனும் இருக்கின்றாரா? அவரே அளித்த ஆச்சரிய பதில்!

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தின் செய்திகள் தினந்தோறும் வெளியாகி ரசிகர்களை

அம்பு ஜனனி என்றால் வில்லாளர் யார்? ஜனனியை கலாயத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் நடந்த நிலையில் இந்த டாஸ்க்கில் ஒரு சிலர் மட்டுமே சரியாக விளையாடியதாகவும், பலர்  சொந்த விருப்பு சொந்த விருப்பு வெறுப்புடன் விளையாடிய தாகவும்

நடிகர் அப்பாஸ்-க்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் அதிர்ச்சி புகைப்படம்!

தமிழ் திரையுலகில் கடந்த 90களின் சாக்லேட்பாய் நடிகராக இருந்தவர் அப்பாஸ். இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம் வைரலாகி வரும் நிலையில்

த்ரிஷாவுக்கு முத்தம் கொடுத்தவர் யார் தெரியுமா? அவரே வெளியிட்ட வீடியோ

நடிகை த்ரிஷாவுக்கு லிப்கிஸ் கொடுத்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு: ஆர்வத்தை தூண்டும் ஃபர்ஸ்ட்லுக்!

 தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று வருகின்றன