close
Choose your channels

பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு? இந்த இருவருக்கு மட்டும் அதிகமா?

Wednesday, October 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. திங்கள் முதல் போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டை ஆரம்பித்துவிட்டனர் என்பதும், முதல் நாளில் இருந்தே சண்டை, சச்சரவு, கருத்து மோதல்கள் ஏற்பட்டு, நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவருமே விஜய் டிவியின் பிரபலங்களாக இருந்து வருகின்றனர். இவர்களுடைய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. விஜய் டிவி சீரியல்கள் நடிப்பவர்களான அருண், அர்னவ், சத்யா, வி.ஜே. விஷால், ஜாக்லின், பவித்ரா ஜனனி, சுனிதா, அன்ஷிதா, தர்ஷா, குப்தா, தர்ஷிகா ஆகியோர்களுக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், இவர்கள் விஜய் டிவி சீரியல்களில் நடித்தபோது பெற்ற அதே சம்பளம் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

சீனியர் நடிகரான தீபக் 30 ஆயிரம் ரூபாய் வாங்குவதாகவும், மகாராஜா திரைப்படத்தால் பிரபலமானதால் சாச்சனாவுக்கும் 30 ஆயிரம் சம்பளம் என்றும், அதேபோல் முத்துக்குமார், ஜெப்ரி, சௌந்தர்யா மூவருக்கும் தினமும் பத்தாயிரம் சம்பளம் என்று கூறப்படுகிறது.

சினிமா பிரபலங்கள் என்பதால் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகர் ரஞ்சித் ஆகிய இருவருக்கும் மட்டும் அதிக சம்பளம், இவர்களுக்கு தினமும் 50,000 ரூபாய் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

முந்தைய சீசனில் ஒரு நாளைக்கு 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை போட்டியாளர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில், இந்த சீசனில் எந்த ஒரு போட்டியாளருக்கும் 50,000ஐ சம்பளம் தாண்டவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், தொகுப்பாளர் கமல்ஹாசனுக்கு 100 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுத்ததாகவும், விஜய் சேதுபதிக்கு 30 முதல் 40 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment