பிக்பாஸ் ராஜூ ஜெயமோகன் காதல் கதை: இத்தனை வருட லவ்வா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 5 நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
நேற்றைய முதல் நாளில் முழுக்க முழுக்க போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக இருந்தனர் என்பதும் குறிப்பாக ராஜூ ஜெயமோகன் மற்ற போட்டியாளர்களை கலகலப்பாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
போட்டியாளர்களில் ஒருவரான இக்கி பெர்ரியை ஜமீன் கோட்டை படத்தில் வரும் பேய் போல இருப்பது போன்று கூறுவதும், தாமரைச்செல்வியிடம் பேய் கதை கூறுவதும், அக்சரா ரெட்டியை அமலா போன்றும், அமலாபால் போன்றும் இருப்பதாக கூறி கலாய்ப்பதும் ஜெயமோகனின் காமெடி ரசிக்கும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் ராஜூ ஜெயமோகன் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்பதும் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்லூரி சாலை, ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், பாரதி கண்ணம்மா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. அதேபோல் கவின் நடித்த ’நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ராஜூ ஜெயமோகன் காதல் கதை என்பது ஒரு தனி கதை. அவர் 12 வருடமாக தாரிகா என்ற பெண்ணை காதலித்தார் என்பதும், சமீபத்தில் தான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ராஜூ ஜெயமோகன் தனது காதல், திருமணம், திருமணத்தில் நடந்த அமளிதுமளி ஆகியவற்றை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியின் வீடியோ இதோ:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com