பிரபல பாடகியுடன் வடிவேலுவை சந்தித்த பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் எலிமினேஷன் ஆன நிலையில் அவர் பிரபல பாடகி உடன் இணைந்து வைகைப்புயல் வடிவேலுவை சந்தித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒருவர் ஜெர்மனியை சேர்ந்த தமிழ் பெண் மதுமிதா என்பதும் அவரது விளையாட்டு மற்றும் கொஞ்சும்தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல பாடகி தீயுடன் வைகைப்புயல் வடிவேலுவை பிக்பாஸ் மதுமிதா சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. வடிவேலு நடித்து வரும் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்திற்கு பாடகி தீயின் தந்தை சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வருகிறார் என்ற நிலையில் பாடகி தீயுடன் மதுமிதா வடிவேலுவை சந்தித்து இருப்பதால் மதுமிதா இந்த படத்தில் நடிக்கிறாரா? அல்லது பாடல் பாடப் போகிறாரா? போன்ற யூகங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

'விக்ரம் வேதா' இயக்குனரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'விக்ரம் வேதா' என்பதும் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் நடித்து இருந்த இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது

மீண்டும் தட்டிப்பறிக்கப்பட்ட கேப்டன் பதவி: யாரிடம் இருந்து யாருக்கு?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கேப்டன் பதவிக்கு டாஸ்க் நடைபெறும் என்பதும் இந்த டாஸ்கில் வெற்றி பெற்றவர் கேப்டன் பதவியை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்

நான் பார்த்த முதல் முகம் நீ: 'வலிமை' பாடலின் முழு வரிகள் இதோ!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவனின் அருமையான வார்த்தைகளில்,

எலிமினேஷனுக்கு முன் மீண்டும் பிரேக்கிங் நியூஸ் போட்ட கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 10 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று ராஜூ காப்பாற்றப்பட்டார் என்று கமல்ஹாசன் அறிவித்து இருந்ததை பார்த்தோம்.

விஜய்சேதுபதி மீது கிரிமினல் வழக்கு: சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.