சிம்புவின் 'எஸ்டிஆர் 48' படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்.. அவரே அளித்த தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிக்க இருக்கும் ‘எஸ்டிஆர் 48’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் நடிக்க இருப்பது உறுதி செய்துள்ளதை அடுத்து இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘எஸ்டிஆர் 48’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் நடந்த நிலையில் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது இந்த படத்தில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகி விட்டதாகவும் அதற்கு பதிலாக புதிய நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட நட்சத்திரங்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெங்கட் பிரபுவை பேட்டி எடுத்த அபிஷேக், தாடி மற்றும் குடுமியுடன் இருப்பதற்கு காரணம் ’எஸ்டிஆர் 48’ படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன் என்று அவரே கூறியதை அடுத்து இந்த படத்தில் அபிஷேக் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Namma Cinema Payyan plays a crucial role in #STR48
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 8, 2024
pic.twitter.com/pHF9mj7oUf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments