பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நடிகையின் கணவர் திடீர் தலைமறைவு: என்ன காரணம்?
- IndiaGlitz, [Sunday,March 06 2022]
பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகையின் கணவர் திடீரென தலைமறைவாகி உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஆர்த்தி. இவரது கணவர் கணேஷ் சாலையில் உள்ள தடுப்பில் மோதி விட்டு திடீரென தலைமறைவாகி விட்டதால் அவரை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தேடி வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் கணேஷ் நேற்றிரவு பட்டினப்பாக்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பில் மோதியது. அப்போது அவரது காரில் இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதாக தெரிகிறது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் கூட்டம் சேரவே கணேஷ் அந்த பகுதியில் இருந்து தப்பி சென்று விட்டதாகவும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கணேஷ் மனைவி ஆர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் விடிய விடிய ஒவ்வொரு மருத்துவமனைகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரை போலீசார் தேடி வருவதாகவும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற கணேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.