இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் இவர்தான்: பிக்பாஸ் தமிழ் போட்டியாளருக்கு குவியும் வாழ்த்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தாய்லாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்களில் ஒருவர் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு விருது கிடைத்துள்ளது. இந்த விருது பெற்ற முதல் இந்தியர் இவர் தான் என்ற பெருமையை எடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஷன் மற்றும் மாடலிங் துறையில் பிரபலமாக இருக்கும் திருநங்கை நமீதா மாரிமுத்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன்பின் ஒரு சில காரணங்களால் போட்டியில் இருந்து வெளியேறினார். இருப்பினும் அவர் இருந்த ஒரு சில நாட்களில் அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் பன்னாட்டு அரசி என்ற போட்டியில் நமீதா கலந்து கொண்டார். இந்த போட்டியில் அவர் முதல் 10 இடத்தில் இடம் பெற்றது மட்டுமின்றி "MISS POPULAR VOTE OF THE WORLD என்ற விருதினையும் பெற்றார். இதனால் அவருக்கு தங்க கோப்பை மற்றும் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை நமீதா பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை நமீதாவுக்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com