பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் காரை தாக்கிய ரசிகர்கள்: அதிர்ச்சி வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய போட்டியாளர் காரை ரசிகர்கள் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பிக் பாஸ் நிர்வாகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் 7வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருவது நடந்து வரும் நிலையில் பிக் பாஸ் தெலுங்கு 7வது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் பல்லவி பிரசாந்த் டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை அமர்தீப் பெற்றார். மூன்றாவது இடத்தை சிரஞ்சீவி பெற்றார்.
இந்த நிலையில் பிக் பாஸ் ஃபினாலே நிகழ்ச்சியை முடித்துவிட்டு தனது குடும்பத்தினருடன் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இருந்து அமர்தீப் காரில் வெளியேறிய போது அவரை சுற்றி வளைத்த ரசிகர்கள் காரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் காருக்குள் இருந்த அமர்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
இது குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள பிக் பாஸ் தெலுங்கு நிர்வாகம் ’இது மிகவும் ஒரு மோசமான நடத்தை, அருவருப்பானது, அமர்தீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு காயம் எதுவும் ஏற்படாமல் இருந்தது அதிர்ஷ்டம்’ என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அமர்தீப் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியது பல்லவி பிரசாத்தின் ரசிகர்கள் என்று கூறப்படுகிறது
Worst behavior by fans attacking on #Amardeep and his family. Truly disgusting to see like this.
— BiggBossTelugu7 (@TeluguBigg) December 18, 2023
Amar stay strong.pic.twitter.com/VQh7Ljle1c#BiggBossTelugu7
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com