சி.எம் ஆகனும்ன்னு 100 நாளில் நீ பண்ற வேலையிருக்கே.. கமல்ஹாசனை கலாய்த்த பிக்பாஸ் போட்டியாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நூறு நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி தமிழ்நாடு முதலமைச்சராக ஆகிவிட வேண்டும் என நீ பண்ற வேலையெல்லாம் இருக்கே.. என பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசனை கலாய்த்து பேசியவர் இன்று அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஆகி உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று 5-வது சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அபிஷேக் ராஜா என்பது தெரிந்ததே. இவர் யூடியூபில் பிரபலமானவர் என்பதும் சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இப்போது எங்களுடைய தலைமுறையினர் கண்களால் நேரில் பார்ப்பதை கூட நம்ப முடியவில்லை. ஆனால் ஊருக்கே தெரியும் பிக்பாஸ் வீடு முழுவதும் கேமரா இருக்கிறது என்று. ஆனால் இந்த 100 நாளில் நீங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று நீங்கள் பண்ற வேலை இருக்கிறதே, என்னால தாங்க முடியலைடா’ என்று பேசியுள்ளார்.
இவ்வாறு கமல்ஹாசனை கலாய்த்து பேசிய அபிஷேக் ராஜா இன்றும் அதே கமல்ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@ikamalhaasan bro idhu enanu konjam paarunga.. pic.twitter.com/66nacsrgxv
— Adheera ?? (@rajni712dhoni) October 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com