கரு.பழனியப்பனின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை

  • IndiaGlitz, [Friday,November 24 2017]

இயக்குனர் கரு.பழனியப்பன் இயக்கும் அடுத்த படமான 'புகழேந்தி என்னும் நான்' என்ற அரசியல் த்ரில்லர் படத்தின் நாயகனாக அருள்நிதி நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் நாயகியாக பிக்பாஸ் புகழ் நடிகை பிந்துமாதவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலம் காரணமாக பல வாய்ப்புகள் அவரை தேடி வந்தபோதிலும் ரீஎண்ட்ரியில் சரியான படத்தில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்ததாகவும், தனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல கேரக்டர் இந்த படத்தில் கிடைத்ததால் ஒப்பந்தம் ஆனதாகவும் பிந்துமாதவி கூறியுள்ளார்

பிந்துமாதவி இந்த படத்தில் ஒப்பந்தமானது குறித்து இயக்குனர் கரு.பழனியப்பன் கூறுகையில், 'என்னுடைய மற்ற படங்களை போலவே இந்த படத்திலும் திரைக்கதையில் நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். பிந்துவுக்கு இந்த படம் நிச்சயம் மறக்க முடியாத படமாக இருக்கும் என்று கூறிய கரு.பழனியப்பன், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் புதுக்கோட்டையில் தொடங்கும்' என்றும் தெரிவித்தார்.