கமல்ஹாசனுக்கு என்னுடைய சப்போர்ட் எப்போதும் உண்டு: பிக்பாஸ் பிரபலம்

  • IndiaGlitz, [Sunday,November 12 2017]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான பரணி, மற்ற பங்கேற்பாளர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் இடையிலேயே வெளியேறிவிட்டாலும் அவருக்கு மக்கள் ஆதரவு இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் கமல் மீது அவர் மரியாதையும் பற்றும் வைத்திருந்தார் என்று சொல்வதை விட பக்தி வைத்திருந்தார் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில் சமீபத்தில் சேலம் செவ்வாய்ப்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட அங்க்ன்வாடி ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் பரணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கமல்ஹாசன் கடந்த 38 ஆண்டுகளாக நற்பணி இயக்கத்தை நடத்தி பொதுமக்களுக்கு நன்மை செய்து வருகிறார். அதை தற்போது விரிவாக்கி இன்னும் அதிகமாக மக்களுக்கு நன்மைகள் செய்ய முடிவெடுத்திருக்கின்றார்

கமல் எப்போதுமே மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். மக்களின் தேவை என்னவோ அதை கமல் அவர்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார். கமல்ஹாசன் அவர்களுக்கு அனைவரின் ஆதரவும் உள்ளது. கலைத்துறையின் சார்பில் இந்த எளியவனின் ஆதரவும் அவருக்கு எப்போதும் உண்டு' என்று கூறினார்.