ஒரு ரூபாய் கூட சம்பளம் தரவில்லை.. பிரபல தயாரிப்பாளர் மீது பிக்பாஸ் பாலாஜி குற்றச்சாட்டு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் ரன்னர் அப் இடத்தை பிடித்தார் என்பது தெரிந்ததே. மேலும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்றார்.
இந்த நிலையில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் ஒரு திரைப்படத்தில் நடித்ததாகவும் ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு ரூபாய் கூட சம்பளம் தரவில்லை என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலாஜி முருகதாஸ் , ரச்சிதா மகாலட்சுமி, சாக்சி அகர்வால் உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’ஃபயர்’. இந்த படத்தை ஜே.எஸ்.கே சதீஷ் இயக்கி வந்த நிலையில் இந்த படம் இன்றைய காலத்து பெண்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் குறித்தும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில் ’ஃபயர்’ என்ற திரைப்படத்தில் நடித்தேன். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்தது. ஆனால் இந்த படத்தில் நான் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளம் வழங்கவில்லை. எனவே நான் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஜேஎஸ்கே சதீஷ் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
I acted in a movie called fire @JSKfilmcorp this guy never paid me single penny !
— Balaji Murugadoss (@OfficialBalaji) July 10, 2024
All I wanted to say is , dude fuck off
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments