ஆரியுடன் இணைந்து திரைப்படம், பிடித்த போட்டியாளர்: பாலாஜியின் முதல் லைவ் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான பாலாஜி முருகதாஸ் விரைவில் ரசிகர்களை சந்தித்து லைவ்வில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பேன் என்று கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது அவர் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த வீடியோ வைரலாகி வருகிறது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு யார்? என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் நான் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே சொல்லி இருக்கிறேன் என்று ஷிவானியை அவர் மறைமுகமாக கூறினார்
மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் ஆஜித், சம்யுக்தாவை சந்தித்ததாகவும், ஆஜித் க்யூட் பாய்’ என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கமல் அவர்களுடன் நெருக்கமாக பழக தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும், அதனால் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவதற்கு முன்பே அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் குறிப்பாக அவர் புரியாதபடி பேசுவதை டீகோட் பண்ணுவதே சூப்பராக இருக்கும் என்றும் அவர் கூறினார்
மேலும் ஆரியுடன் இணைந்து திரைப்படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த பாலாஜி, ‘கண்டிப்பாக நடிப்பேன், ஆரி அண்ணன் கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பிக்பாஸ் வீட்டில் விளையாட்டு காரணமாகத்தான் அவருடன் சண்டை போட்டேன் மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. இருவருக்கும் சரியான கேரக்டர் ஒரு படத்தில் கிடைத்தால் கண்டிப்பாக ஆரி அண்ணனுடன் நடிப்பேன் என்று கூறினார்
மேலும் விவசாயம் பற்றி கூறியபோது ’நான் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது மேடை பெருமைக்கு விவசாயம் செய்வேன் என்று சொல்லவில்லை, கண்டிப்பாக நான் விவசாயம் செய்வேன் என்று மற்றொரு கேள்விக்கு பாலாஜி பதிலளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout