படுக்கையறை காட்சிகளுடன் பாலாஜி முருகதாஸின் 'ஃபயர்'.. கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான பாலாஜி முருகதாஸ் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்றும் அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ’ஃபயர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோவை இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.
பாலாஜி முருகதாஸ், காயத்ரி ஷான், சாக்சி அகர்வால், ரட்சிதா மகாலட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜேஎஸ்கே இயக்கத்தில், டிகே இசையில், சதீஷ் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் பாலாஜி முருகதாஸின் படுக்கையறை காட்சிகள் உட்பட பல கிளாமர் காட்சிகள் உள்ளன என்பதும் அதேபோல் த்ரில்லிங் கதை அம்சம் கொண்டது என்பதும் தெரிய வருகிறது. பாலாஜி முருகதாஸ்க்கு இந்த படம் வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#JSK Film Corporation#JSK Sathishkumar's Maiden Directorial Venture
— Bharathiraja (@offBharathiraja) October 19, 2023
Here is the
TITLE & GLIMPSE #FIRE
Starring @Officialbalaji#Gayathrishan #Rachitha mahalakshmi @ssakshigarwal
Streaming Now!!!💥
WATCH IT🔥🔥🔥 https://t.co/FbljJrggtH@KallerySur10706… pic.twitter.com/BdRiOmf1t4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments