பிக்பாஸ் பாலாஜி வீட்டில் நிகழ்ந்த சோகம்: ரசிகர்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Tuesday,February 02 2021]

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வின்னராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது தெரிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலிருந்து 105வது நாள் வரை சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்டவர் பாலாஜி முருகதாஸ். அனேகமாக அவர் சண்டை போடாத சக போட்டியாளர்களே இல்லை என்று கூறலாம்

இருப்பினும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருந்ததால் ஆரிக்கு அடுத்த இடத்தை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழின் அடிப்படையில் பாலாஜி முருகதாசுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென அவரது வீட்டில் ஒரு மிகப்பெரிய சோகம் நிகழ்ந்து உள்ளது. பிக்பாஸ் பாலாஜியின் தந்தை சற்றுமுன்னர் காலமானதாக அவரது சகோதரர் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். பாலாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இதுவும் கடந்து போகும்’ என்று சோகமாக பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து பாலாஜியின் ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்து அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா சம்பத்தின் தந்தை காலமான நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸின் தந்தையும் காலமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

More News

'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்து தனுஷின் டுவீட்!

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக செய்திகள் இணைய தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகம் வெற்றி நடை போடுகிறது… ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு!

தமிழக அரசு சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டு பல விருதுகளைக் குவித்து இருப்பதோடு சிறப்பான ஆட்சியால் வெற்றி நடைபோடுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

மறப்போம் மன்னிப்போம்… ஆசிரியர்களுக்கு கைக்கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 17,686 ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

மாநாடு' புரமோஷனில் இறங்கிய நயன்தாரா பட வில்லன் நடிகர்!

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை சிம்புவின் பிறந்த நாளை அடுத்து இந்த படத்தின் டீசர் வெளியாக

ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று சொல்லவில்லை: தமிழருவி மணியன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டேன் என்று அறிவிக்கவில்லை என்றும் நாளையே அவர் அரசியலில் அடியெடுத்து வைக்க வாய்ப்பு இருப்பதாகவும்