அப்பா, அம்மாவது குடிப்பார்கள், நீங்க மதுவிலேயே குளிக்கிறிங்களே பாலாஜி: வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சொந்தக் கதையை கூறும் போது, ’தான் அப்பா அம்மா பாசத்திற்காக ஏங்கியதாகவும், ஆனால் அப்பா அம்மா இருவருமே தன்னை கவனிக்கவில்லை என்றும் இருவருமே குடிபோதையில் இருப்பார்கள் என்றும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவார்கள் என்றும் கூறியிருந்தார்
மேலும் ஒரு குழந்தையை பெற்று நல்லபடியாக வளர்க்க தெரியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் அவர் ஆவேசமாக கேட்டது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. பாலாஜி முருகதாசன் கதையை கேட்டு போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கண் கலங்கினர் என்பதும் நேற்றைய நிகழ்ச்சியின்போது கமல்ஹாசன் இதுகுறித்து உருக்கமாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பாலாஜியின் அப்பா அம்மா குடிகாரர்களா என்பது தெரியாது, ஆனால் பாலாஜி முருகதாஸ் ஒரு குடிகாரர் என்ற வகையில் தற்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அது மட்டுமன்றி அவரது அப்பா அம்மாவது குடிப்பார்கள், ஆனால் பாலாஜி மதுவிலேயே குளிப்பார் என்று கூறும் நெட்டிசன்கள் அவர் பீரை தலையில் ஊற்றும் புகைப்படம் ஒன்றையும் வைரலாக்கி வருகின்றனர்.
இதனை அடுத்து பாலாஜியின் அட்மின் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ஒருசில சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் டெலிட் செய்து வருவதாகவும் பாலாஜி முருகதாஸ் உள்ளே பேசியதற்கும் முற்றிலும் முரண்பாடாக இருப்பதால் அவசர அவசரமாக புகைப்படங்கள் வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டு வருவதாகவும் நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்
ஏற்கனவே ஒரு சில போட்டியாளர்கள் தங்களுடைய சோக கதையை பில்டப் செய்து உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நிலையில் பாலாஜி முருகதாசின் உருக்கமான பேச்சு முற்றிலும் பொய் என்று நெட்டிசன்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
யோக்கியன் #BalajiMurugaDoss ??ஏழை தாயின் மகன் ..குடிகார பெற்றோரின் மகன் .. பாவம் ல ??
— ?????????????????????? (@Positivevibessa) October 11, 2020
ச்சா ஒரு மனுஷன் குளிக்க கூட பாத்ரூம் இல்லாம ஷாம்பு வாங்க கூட காசு இல்லாம பீர் ஊத்தி குளிக்கிறாரு பாவம்??#BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/hzqpHWSrAr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com