பிக்பாஸ் பாலாஜிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே திருமணமாகி விட்டதா? அதிர்ச்சி புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில் திருமண புகைப்படத்தை பதிவு செய்து தனக்கு ஒரு மாதத்திற்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது என்றும் இந்த தகவலை வெளியே கூறாமல் இருந்ததற்கு மன்னிக்கவும் என்றும் கூறி ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் ரன்னர்அப் இடத்தை பிடித்தார் என்பதும் அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த பிரபலம் காரணமாக தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பாலாஜி முருகதாஸ் திடீரென சற்றுமுன் ஒரு திருமண புகைப்படத்தை பதிவு செய்து தனக்கு ஒரு மாதத்திற்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது என்றும் அனைவரிடமும் தகவல் கூறாததற்கு மன்னிக்கவும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் இது உண்மையிலேயே அவரது திருமண புகைப்படமா? இன்று ஏப்ரல் 1 என்ற காரணத்தினால் முட்டாளாக்கும் பதிவா? என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அது மட்டுமின்றி பாலாஜி முருகதாஸ் தற்போது ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தின் காட்சிகளா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மொத்தத்தில் பிக் பாஸ் பாலாஜிக்கு உண்மையிலேயே திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments