ஹீரோவாக பிக்பாஸ் பாலாஜியின் முதல் திரைப்படம்: பிரபல தயாரிப்பாளர் ஒப்பந்தம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் முதல் திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ செய்தி வெளிவந்ததை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வின்னர் ஆரி ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் ரன்னர் பாலாஜி முருகதாஸ் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருவதாகவும், பாலாஜி முருகதாஸ் நடிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் பாலாஜியின் முதல் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. பிரபல தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் ரவீந்திரன் அவர்களின் தயாரிப்பில் பாலாஜி முருகதாஸ் முதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் இது குறித்த தகவலை பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இயக்குனர், நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் நடிக்கும் படத்தையும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Expect the unexpected
— Balaji Murugadoss (@OfficialBalaji) October 20, 2021
Signed my First movie as lead
under @LIBRAProduc #BalajiMurugaDoss pic.twitter.com/oMV4NoZaNl
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments