இந்த காதலரையும் பிரிந்துவிட்டாரா பிக்பாஸ் ஆயிஷா? இன்ஸ்டாவில் திடீர் மாற்றம்..!

  • IndiaGlitz, [Sunday,July 02 2023]

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஆயிஷா ஏற்கனவே இரண்டு காதல் தோல்வி ஏற்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் தனது காதலரை இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில் தனது காதலரின் அனைத்து புகைப்படங்களையும் அவர் தற்போது நீக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த காதலரையும் அவர் பிரிந்து விட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷா பரபரப்பாக விளையாடினார் என்பதும் குறிப்பாக அசல் கோலாருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த காதலர் தினத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலரை ஆயிஷா ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார். அதன் பிறகு ஒரு சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிஷாவின் காதலர் பலர் யோகேஷ் என்றும் இருவரும் சிரித்தபடியே இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகியது என்பதும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென தனது காதலனுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஆயிஷா நீக்கிவிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் இந்த காதலையும் பிரிந்து விட்டாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More News

இயக்குனர் பால்கியின் பார்வையில் இந்திய சினிமா

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது .

என்னுடைய பெற்றோருக்கு நான் இயக்கும் படங்கள் புரியாது - அனுராக் காஷ்யப்

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது .

மயில்சாமி ஆசையை நிறைவேற்றி வைத்த ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படங்கள்..!

https://tamil.oneindia.com/television/actor-rajinikanth-has-fulfilled-the-wish-of-late-actor-mayil-samy-by-bowing-to-samy-in-tiruvannamala-519198.html

விஜய் போலவே மாணவ, மாணவிகளுக்கு விழா எடுக்க திட்டமிட்டுள்ள மாஸ் நடிகர்..!

தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்கள் எடுத்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் கொடுத்து

பைத்தியக்காரத் தனத்தின் உச்சம்…. உர்ஃபி ஜாவேத்தின் விருது ஆடைக்கு குவியும் எதிர்ப்பு!

நேற்றிரவு மும்பையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட உர்ஃபி ஜாவேத் பேஸ்ட்டால் செய்யப்பட்ட ஒரு அட்டையை தனது மேலாடையாகப் பயன்படுத்திய நிலையில்