உலக வரலாற்றில் இதுதான் ஆச்சரியம்: பிக்பாஸ் ஆர்த்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியை குடியுரிமை சட்ட மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் நாடு முழுவதும் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் ஒரு சில இடங்களில் வன்முறையில் முடித்துள்ளது என்பதும் அங்கு துப்பாக்கி சூடு மற்றும் பேருந்து தீ வைப்பு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலும் இந்த மசோதாவிர்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் குடியுரிமை மசோதா குறித்து தமிழ் திரையுலக பிரமுகர்கள் பலர் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன் மற்றும் சித்தார்த் ஆகியோர் போராட்டம் செய்யும் மாணவர்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று இரவு ரஜினிகாந்த் அவர்களும் தனது கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகை ஆர்த்தி இதுகுறித்து கூறியபோது, ‘உலக வரலாற்றிலே வெளிநாட்டவர்க்கு குடிஉரிமை வழங்க வேண்டுமென போராட்டம், கலவரம் செய்யும் அப்பாவிகள் இந்தியாவில் மட்டுமே வாழ்வது ஆச்சர்யம்’ என்று கூறியுள்ளார். ஆர்த்தியின் இந்த டுவிட்டிற்கு நெட்டிசன்களிடமிருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக வரலாற்றிலே வெளிநாட்டவர்க்கு குடிஉரிமை வழங்க வேண்டுமென போராட்டம் கலவரம் செய்யும் அப்பாவிகள் இந்தியாவில் மட்டுமே வாழ்வது ஆச்சர்யம்???????? #CAB #CAA #CAA2019
— Actress Harathi (@harathi_hahaha) December 19, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout